தொழில்நுட்ப வலையிலிருந்து குழந்தைகளை மீட்போம்!

By காமதேனு

பி.எம்.சுதிர்

நிலாவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டுவது அந்தக் காலம். இப்போதெல்லாம் பெரும்பாலான அம்மாக்கள் செல்போன்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். குழந்தைகளும் செல்போனில் தெரியும் பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு அடம் பிடிக்காமல் சாப்பிடுகிறார்கள்.

உணவு உண்ணும்போது மட்டுமல்ல,  குழந்தைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதும் பெற்றோர்களுக்குக் கைகொடுப்பது செல்போன்கள்தான். இதைக் கையில் கொடுத்தால் போதும்; குழந்தைகள் பெரியவர்களைத்  தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக அமர்ந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.  கிட்டத்தட்ட குழந்தைகளைக் கவனிக் கும் ஆயாக்களாகவே  சில வீடுகளில் செல்போன்கள் உள்ளன.

இப்படி செல்போன்களில் ஆரம்பிக்கும் தொழில்நுட்பக் கருவிகளின் நட்பு, குழந்தைகள் வளர வளர கம்ப்யூட்டர், வீடியோ கேம் என்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதனால் உடல்ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடாமல் உடல் பருமன், பார்வைக் குறைவு எனப் பல்வேறு பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி,  ஒரு கட்டத்தில்  பெற்றோருக்கு வரமாக இருந்த தொழில்நுட்பக் கருவிகள் காலம் செல்லச் செல்ல சாபமாக மாறி விடுகின்றன. தொழில்நுட்பச் சாதனங்களின் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.   

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE