ராஜபக்ச மட்டுமல்ல... ரணிலும் எனது நண்பர்தான்!- மணிசங்கர் அய்யர் பேட்டி

By காமதேனு

கரு.முத்து

பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமி எப்படியோ அதுபோல காங்கிரஸில் மணிசங்கர அய்யரும் ராஜபக்சவுக்கு நீண்ட நாளைய நண்பர். பிரதமர் மோடியைத் தரம்தாழ்ந்து விமர்சித்தார் என்பதற்காக காங்கிரஸ் இவரைக் கொஞ்ச காலம் ஓரங்கட்டி வைத்திருந்தது. இப்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறதல்லவா..? அதனால் மயிலாடுதுறை தொகுதிக்குள் வலம் வருகிறார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பிரதான கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன்.

இலங்கை அரசியலில் என்னதான் நடக்கிறது?

அங்கே அரசியலில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிபர் சிறிசேனா ஏதோ ஒரு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தியிருக்கிறார். அங்கு ஜனநாயகம் உண்டு, நாடாளுமன்றம் உண்டு, சட்ட அமைப்புகள் உண்டு. அவற்றின் அடிப்படையில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலவேண்டும். அங்கு ஜனநாயகத்தை மீறி எதாவது நடந்தால் அதுபற்றி எல்லோருமே கவலைப்படத்தான் வேண்டும். சிறிசேனா அவ்வாறு ஜனநாயகத்தையோ சட்டத்தையோ மீறி நடந்திருந்தாரானால் அதை அங்கிருப்பவர்கள் கண்காணித்து சரிசெய்ய வேண்டும். எனக்கு இலங்கை மீது அக்கறை உண்டுதான். ஆனால், அது என் நாடு இல்லையே. எனவே, அங்குள்ள தலைவர்களே அதைச் சரிசெய்து கொள்வார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE