சைஸ் ஜீரோ 13 - இன்றே செய்வோம்... நன்றே செய்வோம்... 

By காமதேனு

ருஜுதா திவேகர்

இன்று என்பது வெறும் காலம் மட்டுமல்ல; அது ஒரு தத்துவம். இன்றைய பொழுதை நம் வசமாக்குவதில்தான் எதிர்காலத்துக்கான வெற்றி இருக்கிறது. மிகப் பெரிய காரியங்களுக்கு மட்டுமல்ல; டயட்டை தொடங்குவதற்கும் இன்றே சரியான நாள். ஆம், உங்கள் வயிற்றுடன் கொண்டுள்ள மோசமான உறவை முறித்து நல்லுறவைத் தொடங்க இன்று மட்டுமே சரியான நாள்.  
இதோ நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் இதுவரை நீங்கள் தெரிந்துகொண்ட டயட் என்ற வாழ்வியல் முறையை எப்படி பின்பற்றுவது என்பதற்கு எளிமையாக 6 படிநிலைகளைச் சொல்கிறேன். இவைதான் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கான அடிப்படை.

ஸ்டெப் 1

அதிகாலை எழுந்துகொள்ளுங்கள். ஆதவன் தலை தூக்கும்போதே நீங்களும் எழுந்து கொள்ளப் பழகுங்கள். ஒரு புதிய நாள் உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் கிடைத்திருக்கிறது. அது தரும் சக்தியும் நம்பிக்கையும் உங்களை உற்சாகமாக்கும். சூரிய கதிர்களில் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை. வேறு எந்த உணவிலும் அந்த அளவுக்குக் கிடைக்கப்போவதில்லை.
ஒருவேளை, அதிகாலை எழுந்துகொள்வது என்பது சாத்தியமில்லாத பணியில் இருக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை, நீங்கள் வழக்கமாக எழுந்து கொள்ளும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக எழுந்து கொள்ளுங்கள். இந்த அரை மணி நேரத்தை உங்கள் காலை நேர உடற்பயிற்சிக்கானதாகப் பழக்கப்படுத்துங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE