தேர்தல் இல்லைன்னாலும் வேலை நடக்குது

By காமதேனு

தினகரனுக்கு ‘அம்மா’வின் திருநாமங்கள்!

டோக்கன், மாஃபியா குடும்பம், மிஸ்டர் திகார், திகார்கரன், முட்டை போண்டா, கப்சானந்தன் இதெல்லாம் தினகரனுக்கு அதிமுக-வின் அதிகார பூர்வ பத்திரிகையான ‘நமது அம்மா நாளிதழ்’ சூட்டியிருக்கும் நாமகரணங்கள்! ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நமது அம்மா நாளிதழில், ‘ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்’ என்ற தகவலையும் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிறது!

வருகிறார் வைத்திலிங்கம் வாரிசு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை ஒரத்தநாடு ஏரியாவில் ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி. இதற்கிடையில் தனது வாரிசை மெல்ல உள்ளே இழுத்து வருகிறார் வைத்திலிங்கம். இப்போது வைத்திலிங்கம் போகமுடியாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவரது மகன் ஆர்.வி. பிரபு ஆஜராகிவிடுகிறார். தஞ்சை வட்டாரத்தில் இப்போது பிரபுக்கும் ஃபிளெக்ஸ்கள் முளைக்க ஆரம்பித்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE