சங்கத் தலைவரே பஞ்சாயத்துப் பண்ணலாமா..?- விஷாலை கேள்வி கேட்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

By காமதேனு

பணியின் போது பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பலரும் பல தளங்களில் பேசிவருகிறார்கள். இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது ‘மிக மிக அவசரம்’ படத்தின் வழியாகப் பேசியிருக்கிறார். அந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்த அவரை மழைக்கான ‘ரெட் அலர்ட்’ அறிவித்திருந்த நாளின் மதிய வெயிலில் பாரதிராஜாவின் அலுவலகத்தில் பிடித்தேன்.

‘மிக மிக அவசரம்’ ரிலீஸ் தாமதமாவது ஏன்?

தாமதம்னு சொல்ல முடியாது. படம் முடிஞ்சு இப்போதுதான் சென்ஸார் கிளியர் ஆச்சு. தவிர, சின்னப் படங்கள் எல்லாம் நினைச்ச மாதிரி ரிலீஸ் பண்றதுக்கான சினிமா சூழல் இன்னைக்கு கிடையாது. பெரிய படங்களை மாதிரி நினைச்சவுடனேயே எல்லாம் ரிலீஸ் பண்ண முடியாது. சின்னப் படங்களுக்கான ஸ்பேஸ் கம்மியாதான் இருக்கு. எப்படியும் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிடும்.

படத்தைப் பற்றிப் பேசலாமா..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE