பதவிக்காக குண்டக்க மண்டக்க எதையாவது பேசுகிறார்- சண்முகநாதனைத் தாக்கும் தளவாய் சுந்தரம்!

By காமதேனு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஓபிஎஸ் அணியில் இருந்தவர். அணிகள் இணைந்த பிறகு அமைதியாக இருந்தவர் இப்போது திடீரெனக் கிளம்பியிருக்கிறார். “ஓபிஎஸ்-ஸும் ஈபிஎஸ்-ஸும் ஆட்சியைக் கவனிக்கும் அளவுக்குக் கட்சியை கொண்டு செலுத்தவில்லை. போதாதுக்குகுமரி மாவட்டத்தில் அதிமுக-வை ஊத்தி மூடிய தளவாய் சுந்தரமும், மனோஜ் பாண்டியனும் இப்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் கட்சியை அழிக்க வந்துவிட்டார்கள்” என்று வெடித்திருக்கிறார். அவரது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக-வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான தளவாய் சுந்தரம் காமதேனுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

 முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக அழிந்து வருவதாக பேட்டி கொடுத்துள்ளாரே?

விரக்தியின் உச்சத்துக்குச் சென்று விட்டார் சண்முகநாதன். கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பைவிட இப்போதுதான் கட்சி ஓகோவென இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லையிலும் கூட அப்படித்தான். இயக்கம் எழுச்சியுடன் இருக்கிறது. கட்சியில் புதிய நிர்வாகிகளைத் தலைமைக்கழக நிர்வாகிகளான ஓபிஎஸ்-ஸும், ஈபிஎஸ்-ஸும்தான் நியமிக்கிறார்கள். சண்முகநாதன்தான் முதன் முதலில் எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து ஓபிஎஸ் வீட்டுக்கு ஓடியவர். அங்கு இருந்து மீண்டும் எடப்பாடிபழனிசாமியின் பக்கம் வந்தவர், தன்னை அமைச்சர் ஆக்கவில்லை என்ற விரக்தியில் இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஓபிஎஸ்-ஸும் ஈபிஎஸ்-ஸும் ஆட்சியை கவனிக்கும் அளவுக்கு கட்சியை கவனிக்கவில்லை என்றும் கூறுகிறாரே சண்முகநாதன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE