இவங்களுக்கு எல்லா சாமியும் ஒண்ணுதான்!

By காமதேனு

என்.சுவாமிநாதன்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் வைத்து கடவுள் வேஷம்  கட்டுபவர்கள் பலருண்டு. அது திருவிழாக்கால நேர்த்திக்கடன் மட்டுமே! அதேநேரம் ஆண்டு முழுவதும் கடவுள் வேடம் தரிக்கும் தொழில்முறை கலைஞர்களும் இருக்கிறார்கள். அண்மையில் குமரி மாவட்டத்தில் கோயில் திருவிழா ஒன்றில் அந்த பூலோக கடவுள் அவதாரங்களைச் சந்தித்தேன்.

திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த ‘அவ்வை சண்முகி’ கலைக்குழுவினர் தென்மாவட்ட கோயில்களில் அம்மன், விஷ்ணு, கருப்பசாமி என வேடம் தரித்து ஆடுகிறார்கள். நான் சென்றிருந்த நேரத்தில் குழுவின் தலைவர் சண்முகம் சக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்வதில் மும்மரமாக இருந்தார். அனைவருக்கும் ஒப்பனை செய்த பின்பு, தானும் அம்மனாக அவதாரம் எடுத்துக்கொண்டே நம்மிடம் பேசினார் சண்முகம். “நாங்க ஆடுற இந்தக் கலைக்கு காளியாட்டம்ன்னு பேரு. அம்மன் ஆட்டம், காளியாட்டம், கருப்பசாமி ஆட்டம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரைன்னு 65 வகையான கலைகள் இதுக்குக் கீழ வரும்.

எங்க குடும்பத்துல எனக்கு முன்னாடி யாரும் இந்தக் கலையில் இல்லை. எனக்கு எட்டுவயசு இருக்கும் போது வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்தேன். அதில் ‘அழகுமலர் ஆட’ பாடலுக்குக் கோயிலுக்குள் ரேவதி ஆடுவதைப் பார்த்துட்டு அப்படி ஆடணும்கிற ஆசை எனக்கும் வந்துச்சு. அப்புறமென்ன... ஆறாப்போட படிப்பை விட்டுட்டு முழு நேரமா இந்த வேலைக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல மற்ற குழுக்கள்ல ஆடிட்டு இருந்தேன். பதினஞ்சு வருசத்துக்கு முந்திதான் தனியா இந்தக் குழுவை ஆரம்பிச்சேன். இப்ப எங்க யூனிட்ல 25 கலைஞர்கள் இருக்காங்க. இதில என்னையத் தவிர மற்ற எல்லாருமே டிகிரி படிச்சவங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE