சின்னத்தம்பிக்கு என்ன ஆச்சு?- - ஆனைகட்டியில் ஒரு யானை கதாநாயகன்!

By காமதேனு

ரஜினியின் 2.0-விலோ கமலின் பிக்பாஸிலோ இடம் பெறாமலேயே கோவையின் ஆனைகட்டி கிராமங்களில் படுபிரபலமாகிக் கொண்டிருக்கிறான் சின்னத்தம்பி!

கோவை - கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் காட்டுயானைகள் உலாவுவதும், அவை ஊருக்குள் நுழைவதும், அவற்றுக்கு கட்டையன், நெட்டையன், சின்ன விநாயகன், பெரிய விநாயகன், பிள்ளையாரப்பன், ஆண்டவன் என்றெல்லாம் மக்கள் பெயர் வைப்பதும் சகஜமான ஒன்று. அப்படி இரண்டு ஆண் யானைகள் ஆனைகட்டி சுற்றுவட்டாரக் காடுகளில் சுற்றித் திரிந்தன. அவற்றுக்கு சின்னத்தம்பி, பெரியதம்பி என மக்கள் நாமகரணம் சூட்டினார்கள்.

 கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தம்பிகள் இருவரும் இந்தப் பகுதியில் ஜோடியாய் சுற்றிவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மிஸ்டர் பெரிய தம்பி மட்டும் மிஸ்ஸிங்! இந்தப் பிரிவால், இதுநாள் வரை சாதுவாய் வந்து போய்க்கொண்டிருந்த சின்னவர், இப்போது சினம் கொண்டு நிற்கிறார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அனுவாவி சுப்பிரமணியர் கோயிலுக்கு மலையேறியவர்களை மறித்தது சின்னத்தம்பி. மக்கள் அதை கற்களைக் கொண்டு அடித்துத் துரத்த, சமூக ஆர்வலர்கள் யாரோ அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வலம்வர விட்டுவிட்டார்கள். இதைத் தொடர்ந்தும் தோட்டங்களுக்குள் புகுந்து துவம்சம் செய்த மிஸ்டர் சின்னவர், ஆலமரமேட்டில் ஒரு மளிகைக் கடையை உடைத்து அங்குள்ள தின்பண்டங்களை ருசித்தார். அடுத்தடுத்த நாட்களிலும் தோட்டங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை பயிர்களை வாரிச் சுருட்டிய சின்னத்தம்பி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் துரத்தவும் செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE