அழகிரிக்காக போலி குற்றவாளியாக 48 நாள் சிறையில் இருந்தவன் நான்!- துரை தயாநிதியால் சீண்டப்பட்ட இசக்கிமுத்து பேட்டி

By காமதேனு

மு.க.அழகிரி ஆதரவாளர்களிலேயே கொஞ்சம் விவரமானவர் என்று, மதுரை திமுக-வில் இசக்கிமுத்துவைச் சொல்வார்கள். அழகிரிக்காக பலமுறை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவரை இப்போதும் அழகிரிக்காகவே கட்டம்கட்டி வைத்திருக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகஅழகிரிக்கு தன்னாலான ஆலோசனைகளைச்சொல்லிவரும் அவரை, கி.வீரமணியை அசிங்கப்படுத்தியதுபோல மரியாதையில்லாமல் பேசிவிட்டதாக அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது புதிதாய் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது!

விஷயம் கேள்விப்பட்டு இசக்கிமுத்துவைச் சந்திக்க மதுரை சர்வேயர் காலனியில்உள்ள அவரது வீட்டுக்குப் போனேன். “பத்திரிகை நிருபர்” என்று சொல்லி முடிப்பதற்குள்கையெடுத்துக் கும்பிட்டு, “தம்பி, பேட்டியே வேணாம். இருக்கிற பிரச்சினையே போதும்” என்று வாசலிலேயே தடுத்தார் அவரது மனைவி பூரணி. “இல்லக்கா, நான் அழகிரி, ஸ்டாலின் பிரச்சினை பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்” என்று வாக்குக்கொடுத்த பிறகுதான் உள்ளே அனுமதித்தார். சற்று நேரம் நாற்காலியில் கிடந்த ‘முரசொலி’ பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்தேன். சட்டையைப் போட்டுக்கொண்டு வந்தார் இசக்கிமுத்து.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, “நல்ல குரல்வளம் இருந்தாலும்கூட, கலைஞரைப் போலவே கரகரத்த குரலில் பேசுவதை ஒரு பாணியாகவே வைத்திருக்கும் திமுக பேச்சாளர்கள் பல பேரைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் கலைஞரின் கையெழுத்தை அப்படியே எழுதுவீர்களாமே, எழுதிக்காட்டலாமா?” என்றேன். ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்று எழுதியவர், “மதுரையில் இருந்து தலைவர் கலைஞருக்கு அதிகமாகக்கடிதம் எழுதியவன் யாரென்று கணக்கெடுத்தால் நானாகத்தான் இருப்பேன்.

மற்றவர்களுக்காக எழுதிக்கொடுத்தாலும், ‘இது இசக்கிமுத்து வேலைதான்யா’ என்று கையெழுத்தை வைத்தே தலைவர் கண்டுபிடித்துவிடுவார். ‘தலைவர் கலைஞரின் பேனா முனையைவிட, நம் இசக்கிமுத்து அண்ணனின் பேனா முனை சக்தி வாய்ந்தது’ என்று அழகிரி அண்ணனே பல கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஏனென்றால், மதுரையில் இருந்து யாரைப்பற்றியாவது நான் புகார் சொல்லி கடிதம் எழுதினால், அவர்களைக் கட்சியில் இருந்தே நீக்கிவிடுவார் தலைவர்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம் என்ன நாம் வந்த வேலையை ஆரம்பித்தோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE