அழகிரி திரட்டும் ‘அமைதி’ப்படை!- கலக்கத்தில் ஸ்டாலின் முகாம்!

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்

திமுக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டபோது கட்சிக்காக உழைத்த உண்மைத் தொண் டனின் அலைபேசிகள் அனைத்தும் பல நாட்கள் என்கேஜ்டாகவே இருந்தன. அலைபேசி வழியாகத்தான் அவர்கள், தேர்தலில் திமுக செய்த தவறுகளைப் பட்டியலிட்டு தங்களுக்குள் ஆற்றாமையைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்தத் தேர்தலில்தான் கட்சிக்குச் சம்பந்தமில்லாத தொழிலதிபர்களையும், பசையுள்ள கல்வித் தந்தைகளையும் வேட்பாளராக நிறுத்தி விஷப் பரீட்சை செய்தது திமுக. இப்போதும் அதுபோலவே திமுக பிரமுகர்களின் அலைபேசிகள் பிசியாகவே இருக்கின்றன. இப்போது கட்சிக்குள் அழகிரி எழுப்பியிருக்கும் ஆதங்கத்தைப் பற்றிய நியாய தர்மங்கள் ஆழமாக விவாதிக்கப்படுகின்றன!

“எனது ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்ல வந்தேன்” என்று கருணாநிதியின் சமாதியில் ஆர்ப்பரித்த அழகிரி, செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில், நீதிகேட்கும் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அமைதிப் பேரணி என்று அவர் சொன்னாலும் திமுக-வில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் அதிருப்தியாளர்களை ஸ்டாலினுக்கு எதிராகத் திரட்டி, “உண்மையான திமுக தொண்டன் என்னிடம்தான் இருக்கிறான்” என்பதை நிரூபிக்கும் ஆர்ப்பாட்ட பேரணியாகவே இதை நடத்தத் தயாராகி வருகிறார் அழகிரி.

குரலை உயர்த்திய துர்கா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE