தங்க நாற்குணத் தலைவர்!

By காமதேனு

அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவையொட்டி, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அஞ்சலி செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பகவத் கீதையின் வரிகள் அந்த மாமனிதரின் புகழ் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவை. ஆன்மாவின் அழிவற்ற தன்மையை விளக்கும் கீதையின் அந்த வரிகள் இப்படிச் சொல்கின்றன -

‘ஆன்மாவை ஆயுதங்களால் துண்டு செய்ய முடியாது; நெருப்பாலும் பொசுக்க முடியாது; தண்ணீராலும் மூழ்கடிக்க இயலாது; காற்றாலும் கரைக்க முடியாது!’

மக்கள் சேவை ஒன்றே லட்சியம் எனப் பொது வாழ்க்கைக்கு வரும் எந்தவொரு நல்ல தலைவருக்கும் நான்கு அடையாளங்கள் முக்கியமானவை. எளியோரின் வலி கண்டு கலங்கும் கருணை மனம்; அவருக்கொரு துன்பம் வந்தால் அதைத் துடைப்பதற்காக விசுவரூபம் எடுக்கும் துணிச்சல் குணம்; நாளைய சவால்களை இன்றே இனம் கண்டு அதற்கேற்ப திட்டமிடும் தொலைநோக்குப் பார்வை; தவறு செய்தது தன்னவர்களே ஆனாலும், தயங்காமல் மன்னிப்பு கேட்கும் பரந்த உள்ளம்!

சாலை - குடிநீர் - மின் இணைப்பு - கல்வி அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கச் செய்த வாஜ்பாயின் கருணை; நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதிரிகளை ஒடுக்கி வைக்க ‘பொக்ரானில்’ நடத்திய அணுகுண்டு சோதனை; தொழில், விவசாயம், சேவைத் துறைகள் வளர தேசம் முழுவதையும் இணைக்கும் வகையில் செயல்படுத்திய தங்க நாற்கர நெடுஞ்சாலை இணைப்புத் திட்டம்; குஜராத்தை ஆண்டது தன் கட்சியே என்றாலும், பிரதமர் என்ற மமதை இன்றி அன்றைய மதக் கலவரங்களுக்காக மக்களிடம் அவர் கேட்ட மன்னிப்பு..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE