குழந்தைகளை நம்புங்கள்; நம்பிக்கை ஊட்டுங்கள்!

By காமதேனு

உங்கள் குழந்தை எதிலும் வெற்றியாளராய் வர வேண்டுமானால் முதலில் அவர்களின் மனதில் தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவர்களுக்கு எத்தனை ஆற்றல்கள் இருந்தாலும், வாழ்க்கையில் விரும்பிய இலக்கை அடைய முடியாது. அத்தகைய தன்னம்பிக்கையை உங்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்க இதோ சில வழிகள்;

உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமானால், முதலில் நீங்கள் அவர்களை நம்ப வேண்டும். உங்கள் குழந்தை உங்களிடம் வந்து, “அப்பா நான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சொன்னால் முதுகில் தட்டிக் கொடுத்து, “உன்னால் நிச்சயம் இதில் வெற்றி பெற முடியும்...” என்று உற்சாகப்படுத்துங்கள். ஒருவேளை, அவர்களால் அந்தப் போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனால், இதில் தோற்றால் என்ன... 

அடுத்தமுறை கண்டிப்பாக நீ ஜெயிப்பாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனதில் தன்னம்பிக்கை ஜொலிக்கும்; அடுத்தமுறை கட்டாயம் ஜெயிப்பார்கள்!

இதற்கு மாறாக, தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போவதாக அவர்கள் சொன்னதுமே, “உன்னால ஒழுங்கா நடக்கவே தெரியல... நடக்கும்போதே தடுக்கி விழற... இதுல ஓட்டப்பந்தயத்துல வேற சேர்றியா?” என்று மட்டம் தட்டினால், அவர்களின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் தகர்ந்துவிடும். எனவே, உங்கள் குழந்தைகளால் எத்தகைய சவால்களையும் எதிர் கொள்ள முடியும் என்று முதலில் நீங்கள் உறுதியாய் நம்புங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE