பூலித்தேவன் முதல் பகத்சிங் வரை... கோவையில் வளரும் தேசபக்தி கோட்டை!

By காமதேனு

டெல்லி செங்கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தெரியும். தேச பக்தி கோட்டை தெரியுமா? சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தும் வகையில் கோவையில் தயாராகிவருகிறது தேசபக்தி கோட்டை. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு, கோட்டையைத் தேடி கிளம்பினேன்.

பசுமை போர்த்திய மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுக்கு இடையே செல்கிறது கோவை - பாலக்காடு சாலை. மதுக்கரை, க.க.சாவடிக்கு முன்பாக இடதுபுறம் திரும்பும் மண் சாலையில் சுமார் ஒரு பர்லாங் தூரம் சென்றால் பிரம்மாண்ட மதில் சுவர் வருகிறது. உள்ளே நுழைந்தால்… புல் தரையை மையமாகக்கொண்டு டெல்லி செங்கோட்டை போன்ற வடிவமைப்புடன் கூடிய நூற்றுக்கணக்கான சிறு சிறு மாதிரி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபங்களில் பூலித்தேவன் தொடங்கி பகத்சிங் வரை 150-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து, அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பையும் கீழே பொறிக்கப் போகிறார்கள். அது மட்டுமா... ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைச் சித்திரிக்கும் காட்சி மையம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறையில் செக்கிழுத்த காட்சி போன்ற சுதந்திரப் போராட்டக் காட்சிகளும் இங்கு நிறுவப்படவிருக்கின்றன. இதற்குத்தான் தேசபக்திக் கோட்டை என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதை ‘தேசபக்தன்’ என்கிற அமைப்பின் மூலம் முன்னெடுத்துச் செய்கிறார் கோவை வழக்கறிஞர் வி.நந்தகுமார்.

இந்தக் கோட்டை குறித்து நந்தகுமார் நம்மிடம் பேசினார். “மக்களிடையே நாட்டுப் பற்றை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். கடந்த 2014 ஆகஸ்ட் 14-ம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை முழுக்க தேசியக் கொடியால் மறைத்து சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். அந்த தேசியக் கொடி எட்டு மணிநேரம் ரேஸ்கோர்ஸ் ரோட்டை மறிச்சு நின்னுச்சு. சி. ஆர்.பி.எஃப். வீரர்கள் 450 பேர் அங்கே அணிவகுத்தாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE