நைட்டி... பாதி மீசை... பாதி தலைமுடி..!- ஒரு ஹோட்டல்காரரின் சுயமரியாதைப் போராட்டம்

By காமதேனு

தனக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை இப்படியும் தண்டிக்கலாம் என்று பாடம் எடுத்துவருகிறார் யெகியா. அவரை நான் சந்தித்த முதல் சில கணங்கள் சுவாரஸ்யமானவை. கேரளத்தின் ஏற்றமும், இறக்கமும் நிறைந்த குறுகலான சாலையில் இருக்கிறது யெகியாவின் சிறு உணவகம். கடையின் முகப்பில் நைட்டி அணிந்து திரும்பி நின்றுகொண்டிருந்தவரிடம் “ஊணு கிட்டுமோ அம்மே..?” என்றேன். “ஊணு கிட்டும்... பட்சே ஞான் அம்மையல்ல… மாமனானு” எனப் புன்னகைத்தபடியே திரும்பினார் யெகியா. ஏரியாவாசிகள் இவருக்கு வைத்துள்ள செல்லப்பெயர் ‘நைட்டி மாமா’.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் முக்குன்னத்தில் இருக்கிறது ஆர்.எம்.எஸ் தட்டுக்கடை. கடையின் உரிமையாளரான ’யெகியா’வுக்கு நைட்டிதான் நித்ய உடை. தலையிலும் மீசையிலும் பாதி கேசத்தை வழித்து எடுத்துவிட்டிருக்கிறார். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு காமெடி மனிதராகவே தெரியும். ஆனால், 75 வயதான யெகியாவின் பின்னணி சுயமரியாதை நிறைந்தது. அந்த சுயமரியாதை தான் சமீபத்தில் அவரை கேரள முதல்வர் பினராயி விஜயனோடு கைகுலுக்க வைத்திருக்கிறது.

யெகியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘ஒரு சாயாக்கடைக்காரன்ட மன் கீ பாத்’ என்கிற தலைப்பில் ஆவணப்படத்தை எடுத்துள்ளார் பத்திரிகையாளரான சனு கும்மில். இது 2018-ம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்படமாக கேரள திரைப்பட விழாவில் தேர்வானதுடன், மாநில அரசின் ஒரு லட்சம் ரூபாய் பரிசையும் பெற்றுள்ளது. 

பரிசை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கியிருக்கிறார். அந்த விழா மேடையில் முதல்வர் இவரையும் அழைத்துப் பேசி கவுரவப்படுத்தினார். யெகியாவிடம் பேசினேன். “ராத்திரி என் கடையில் பரோட்டாவும், பொறிச்ச கோழியும் ஃபேமஸ். தினமும் 100 கிலோ கோழி வாங்கி கறி சமைப்பேன். ரெண்டு மணி நேரத்துலயே வித்துத் தீர்ந்துடும். நேரம் ஆகிடுச்சு. கோழியை வெட்டிக்கிட்டே பேசுவோமா” என்றபடி தொடர்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE