பிடித்தவை 10: எழுத்தாளர் - இயக்குநர் அறச்செல்வி

By காமதேனு

இரா.செல்வி என்னும் இயற்பெயர் கொண்ட அறச்செல்வி கட்டுரையாளர், குறும்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். கோவையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், ‘பெண்ணியச் சிந்தனைகள்’, ‘பெண்ணியமும் மனிதகுல விடுதலையும்’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எழுத்துலகில் மட்டுமல்லாது... ‘கற்பூர செத்தைகள், பூவாத்தாள், புதுமைத் தலைமுறைங்க நாங்க’ என மூன்று குறும்படங்களையும் இயக்கி கலைத்துறையிலும் கவனிக்க வைக்கிறார்.

திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது, திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது, ஈரோடு தமிழன்பன் விருது, பூசாகோ கலை அறிவியல் கல்லூரி விருது எனத் தன் எழுத்துக்கும், இயக்கத்துக்கும் போட்டிபோட்டு விருதுகளைக் குவித்துள்ள அறச்செல்விக்குப் பிடித்தவை பத்து இங்கே:

ஆளுமை: சிறுபிராயத்தில் எனக்கு ஆன்மிகநெறி போதித்த குரு  என்.நாராணன். கல்லூரியில் மார்க்ஸிய அணுகுமுறையை அறிமுகப்படுத்திய முனைவர் முப்பால்மணி.

கதை: காஞ்சனா தாமோதரனின் திவ்யதரிசனம். 30-ம் நூற்றாண்டில் துளசி என்ற இன்குபேட்டர் மூலம் பிறந்த கோதையின் மனநிலையில் இருந்து கிரக மாற்ற முயற்சி குறித்தும் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டம் குறித்தும் சிந்திக்க வைக்கும் படைப்பு அது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE