கீழே நிழலகம்... மேலே படிப்பகம்..!- இது ஆயக்காரன்புலத்து ஐடியா

By காமதேனு

பயணிகள் நிழலகத்தில் படிப்பகம் நடத்த முடியுமா..? முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் நாகை மாவட்டத்தின் ஆயக்காரன்புலம் ஊர் மக்கள்!

திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் உள்ளது ஆயக்காரன்புலம். இங்குள்ள வள்ளுவர் சாலையில்தான் ஊர்மக்களே ஒரு பயணிகள் நிழலகத்தைக் கட்டி அதன் மேல்தளத்தில் படிப்பகமும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வள்ளுவர் நிழலகம் என்ற அந்த நிழலகம் உள்பகுதியில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, பயணிகள் அமர சலவைக்கல் மேடை அமைக்கப்பட்டு பக்கா பராமரிப்புடன் பளிச்செனக் காட்சியளிக்கிறது. நிழலகத்தில் நடுநாயகமாகசிலையாய் அமர்ந்திருக்கிறார் திருவள்ளுவர்.

காரைக்கால் பண்பலை வானொலி இன்றைய சிந்தனையை காற்றில் உதிர்த்துக்கொண்டிருக்கிறது. கேமராக்கள் இரண்டு தனது பூதக் கண்களால் சாலையை நோக்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றன. அனைவரும் நேரம் பார்க்க வசதியாக மின்னணு கடிகாரம் ஒன்று தப்பாது நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிழகத்தின் மேல் பகுதியில்தான் அந்தப் படிப்பகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE