இந்தியாவின் இன்னொரு பெருமை வெங்கடேஷ்!

By காமதேனு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக் ஷய் வெங்கடேஷ் கணிதத்துக்கான நோபல் பரிசான ‘ஃபீல்ட்ஸ்’ பதக்கம் பெற்றுள்ளார். டெல்லியில் பிறந்த இவர் இரண்டு வயதிலேயே ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.

சிறுவயதிலிருந்தே கணிதத்திலும் இயற்பியலிலும்  இவருக்குள் தனித்துவமான திறமை வளர்ந்தது. 12 வயதில், இயற்பியல் மற்றும் கணிதத்துக்கான ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றார். கணிதத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், தொடர்ந்து கணிதத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

தற்போது தனது கணித சாதனைகளுக்காக, கனடாவின் கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் நினைவாக வழங்கப்படும் ‘ஃபீல்ட்ஸ்’ பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் வெங்கடேஷ். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE