குழந்தைகளுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்!

By காமதேனு

இந்த அவசர யுகத்தில் ஒவ்வொருவரும் நேரத்துடன் போரிட்டு வாழ்க்கையைக் கடந்துகொண்டிருப்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதே இல்லை. 

தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். அதேபோல், குழந்தைகளும் தங்களுக்கு வழிகாட்ட ஆளின்றி தவித்து வருகிறார்கள் இந்தச் சூழல் மாற வேண்டுமானால் தினசரி ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் பெற்றோர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.

நாம் வீட்டில் இருந்தால் மட்டுமே அது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிப்பதாக ஆகாது. வீட்டிலிருக்கும் அந்த நேரத்தில் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் அவர்களுக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கவும் வேண்டும். அப்படிச் செய்தால்தான் நீங்கள் அவர்களுக்காகப் பயனுள்ளபடி நேரத்தைக் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

காலை நேரம் முக்கியம் 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE