கோவையில் கொழிக்கும் பிச்சைக்காரர்கள்!- மாண்பை இழக்கிறதா ‘மான்செஸ்டர்’ மாநகரம்?

By காமதேனு

“அம்மா, உங்க பேரு என்ன?”
“காத்தாயி”
“சரி, உங்க பேரு?”
“எம் பேரும் காத்தாயிதாங்க!”
“சரி, அந்தம்மா பேரு?”
“அவளும் காத்தாயிதாங்க!”
“ஏன் அந்தம்மா பேரைச் சொல்ல மாட்டாங்களோ?”
“அவளுக்கு சுத்தமா காது கேக்காதுங்க. அதுதான் நான் சொல்றேன்..!”
“சரி, நீங்க எல்லாம் எந்தந்த ஊரு!”
“எல்லோருமே கள்ளக்குறிச்சிதானுங்க!”

பொறுமை இழந்து கடுப்பாகிறார் கவுன்சலிங்கில் அமர்ந்திருந்தவர். “இதா பாரு... நேத்து ஒண்ணு இன்னைக்கு ஒண்ணுன்னு சொல்லக் கூடாது. உண்மையைச் சொல்லணும். உங்க மூணு பேரோட பேரும் காத்தாயிதானா?”

“இல்லீங்க... எம் பேரு காத்தாயி. அவ பேரும் காத்தாயி. அடுத்தவ பேரு அலுமேலு..!”

இப்படியாக நீளுகிறது அந்த கவுன்சலிங் கூட்டம். முன்னுக்குப் பின் முரணாக வார்த்தைக்கு வார்த்தை மாற்றிப் பேசுகிறார்கள். அவர்களிடமிருந்து உண்மையான தகவல்களை வரவழைப்பதற்குள் கவுன்சலிங் செய்பவர்களுக்குப் போதும் போதுமாகிவிட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்திலிருக்கும் அரசு மாநகராட்சி இரவு நேரத் தங்கும் மையம் அது. நகருக்குள் பிச்சை எடுப்பவர்களைப் பிடித்து, அவர்களுக்கு கவுன்சலிங் அளித்து, குடும்பம் இருப்பவர்களுக்குக் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதும், ஆதரவற்றோர்களை மாநகராட்சியின் இல்லங்களிலும் தங்க வைப்பதும்தான் இந்த கவுன்சலிங்கின் நோக்கம். கூடவே, பிச்சை எடுக்கும் பழக்கத்தை ஒழிப்பதும் இதன் அடிப்படை நோக்கம். அப்படி ஒரு கவுன்சலிங்கில்தான் மேற்கண்ட காட்சிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE