குழந்தைகளைக் கிச்சனுக்குள் விடுங்கள்!

By காமதேனு

குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் முதல் கவலையே அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம்கூட அதற்கு அப்புறம்தான். ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நன்றாகச் சாப்பிட வேண்டும். அதிலும் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

ஆனால், இன்றைய அவசர உலகில் நொறுக்குத் தீனிகளுக்கும், ப்ளே ஸ்டேஷன் செல்போன்  ஆகியவற்றுக்கும் அடிமையாகிவிட்ட குழந்தைகளைச் சாப்பிட வைப்பதே பெற்றோர்களுக்குப் பெரும்பாடாக உள்ளது.

பெற்றோர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குழந்தைகளைச் சாப்பிட வைக்க அவர்கள் காட்டும் முதல் வழி, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதுதான். பெற்றோர்கள் என்னதான் பிஸியாக இருந்தாலும் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் டிவி, செல்போன் போன்ற எந்த இடையூறுகளும் இருக்கக் கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் பயனுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்.

குழந்தைகளைக் கிச்சனுக்குள் விடுங்கள் 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE