பாப்பாள் என்ன பாவப்பட்ட மனுஷியா..?- தி.க.பாளையத்துத் தீண்டாமை!

By காமதேனு

பாப்பாளிடம்,“என்ன படிச்சிருக்கீங்க..?”என்று கேட்கிறேன்.

“நான் பள்ளிக்கூடமே போனதில்லீங்க... மண்ணுல எழுதி, எழுதி கையெழுத்துப் போட மட்டும் பழகீட்டேன்!” என்றபடியே நோட்டு ஒன்றை விரிக்கிறார். 

கைப்பையில் இருந்த பேனாவை எடுத்து அதில் ஏதோ எழுத முற்படுகிறார்.   “இப்பத்தான், படிக்கவே இல்லீன்னீங்க... ஆனா, ஏதோ எழுதுறீங்களே..!” என்கிறேன் நான்.

அதைக்கேட்டு சிரிக்கும் பாப்பாள், “நேத்து வரைக்கும், எத்தனை புள்ளைக சாப்பிட்டுதுன்னு வாய்க்கணக்கு வச்சுத்தான் சொல்லுவேன்; எழுதிக்குவாங்க. இப்படி பிரச்சினை கிளப்பீட்டனா. அதனால, ‘வாய்க்கணக்கெல்லாம் ஆகாது. நீயே ஒரு நோட்டு போட்டு எழுதி வை’ன்னுட்டாங்க.. படியாதவ நான். இப்பத்தான் எழுதிப் பழகறேன்.” என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE