பிடித்தவை 10- கவிஞர் சுதந்திரவல்லி

By காமதேனு

நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் சுதந்திரவல்லி. ‘பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கி கொண்டு வந்து சேர்த்தால்...’ என்னும் தனது முதல் கவிதைத் தொகுப்பிலேயே இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தவர். ‘மீன் பொதிந்த இலைகள்’ இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு.

கவிஞர் லெட்சுமி மணிவண்ணனின் மனைவியான இவர் ஏழு ஆண்டுகள் தனியார் பள்ளியில் பணி செய்தார். இலக்கிய ஆர்வத்தால் பணியை விட்டுவிட்டு வாசிப்பு, எழுத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நாகர்கோவிலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘இலைகள்’ எனும் இலக்கிய அமைப்பில் இயங்கிவரும் சுதந்திரவல்லியின் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: நாட்டுப்பற்று, சமஉரிமை, சமூகநீதி, தன்னம்பிக்கை, தைரியம் என மானுடவாழ்வுக்குத் தேவையான அத்தனையையும், தன் படைப்புகளின் ஊடே எளிய மக்களுக்கும் கடத்திய பாரதியார். சுதந்திரம் கிடைக்கும் முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ எனக் கொண்டாடித் தீர்த்த தீர்க்கதரிசி அவர்.
கதை: கோணங்கி எழுதிய ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’, ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ‘நிலவறைக் குறிப்புகள்’.

கவிதை: பிரமிள் கவிதைகள், தேவதச்சன் கவிதைகள், பெருந்தேவி, ஃபிரான்சிஸ் கிருபா எனப் பட்டியல் பெரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE