எங்கே அந்த ‘அச்சே தின்?’

By காமதேனு

உலகக் கோப்பை கால்பந்து கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பாவின் மீம் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகிவருகிறது. பாஜகவின் ‘அச்சே தின் (நல்ல நாள்)’ என்ற 2014 தேர்தல் முழக்கத்தைக் கிண்டல் செய்யும் வகையில் அந்த வீடியோ மீம் உருவாக்கப்பட்டிருப்பதே காரணம். ‘யாராவது அச்சே தின் என்று சொல்லும்போது’ என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், போக்பா யாரையோ தீவிரமாகச் சுற்றிச் சுற்றித் தேடுகிறார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 17-ல் பதிவேற்றியது. இந்த மீம் வீடியோ ட்விட்டர் பயனர்களை வெகுவாகக் கவர்ந்ததால், பலரும் பகிர்ந்து ட்ரெண்டாக்கினர். பலர் ‘காங்கிரஸுக்கு இருந்தாலும் கொஞ்சம் படைப்பாற்றல் அதிகம்தான்’ என்றும் பாராட்டியிருந்தனர்!

தொகுப்பு: கனி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE