பிடித்தவை 10: கவிஞர் ப.இராஜராஜேஸ்வரி

By காமதேனு

கவிஞர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ப.இராஜராஜேஸ்வரி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த இவர் தற்போது, ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ்துறைத் உதவிப் பேராசிரியர். இவரது, ‘விழுதுக்குள் உறங்கும் வேர்கள்’ கவிதைத்தொகுப்பு இலக்கிய உலகில் கவனம் ஈர்த்தது. இவரது கவிதைகளில் நவீனமும், மரபும் 
ஊடும்பாவுமாய் கலந்திருப்பது நேர்த்தி. ஆய்வுக்கட்டுரைகள், நவீன இலக்கியத்தின் மீதான விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் முனைப்பு காட்டுபவரின் பிடித்தவை பத்து இங்கே…

கவிதை: ‘கவிழ்த்துவைக்கப்பட்டு நூலாம்படை படர்ந்த’ எனத் துவங்கும் இன்குலாப் எழுதிய கவிதை.

நான் எழுதியதில் பிடித்தது: உன் விழிகள், காணாத திசைகளை என் விழிகளால் பாரேன் நானும் காந்தாரியாக வேண்டுமா?
ஆளுமை: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என நெஞ்சுருகியவர். பசித்தவருக்கு இல்லை என்று சொல்லாமல், புசிப்பதற்கு உணவு வழங்க அணையாமல் எரியும் அடுப்பை மூட்டிவைத்த வள்ளலார்.


தலம்: ஆவுடையார் கோயில். தமிழுக்குத் திருவாசகம் தந்த மணிவாசகரை இறைவன் ஆட்கொண்ட இடம் அது. அங்கு செல்லும்போதெல்லாம் திருவாசக வரிகளும் நினைவு இடுக்குகளுக்கு இடையில் சுழன்றுகொண்டே இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE