குழந்தைகளே வாருங்கள் அரசுப் பள்ளிக்கு!- அழைக்கிறார் அரசுப் பள்ளி தூதுவர்!

By காமதேனு

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க அலைமோதும் இந்தக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வலியுறுத்தி தனியாளாகப் பிரச்சாரம் செய்கிறார் புதுகை செல்வா. இவ்வளவுக்கும் இவர் ஒன்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் அல்ல… அரசு ஊழியரும் அல்ல. தன்னார்வலர் மட்டுமே. தனது பிரச்சாரத்தால் இந்தக் கல்வியாண்டில் மட்டுமே அரசுப் பள்ளிகளில் இவர் சேர்த்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டுகிறது!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்செல்வகாந்தி தான், புதுகைசெல்வா என்கிற புனைப்பெயருக்குச் சொந்தக்காரர். ஒளிப்பதிவாளரான இவர் ஆவணப்பட இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமாருடன் இணைந்து ‘என்று தணியும்?’, ‘எனக்கில்லையா கல்வி?’, ‘வாச்சாத்தி உண்மையின் போர்க்குரல்’, உள்ளிட்ட ஆவணப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க உந்திவரும் இவர், ‘அரசுப் பள்ளிகளில் இணை

கின்ற பெற்றோர்கள் இயக்கம்’ என்கிற அமைப்பையும் நடத்திவருகிறார். கடந்த கோடை விடுமுறை முழுவதும் புதுக்கோட்டை நகரில் அரசுப் பள்ளிகளுக்காக இவர் மேற்கொண்ட பறையிசை பிரச்சாரம், இந்தக் கல்வியாண்டில் மேலும் அதிகமான குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துவந்துள்ளது.

இதுதவிர புதுக்கோட்டையின் அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றையும் பற்றி ‘இது எங்கள் பள்ளி’ என்கிற தலைப்பில் இவர் உருவாக்கியிருக்கும் குறும்படங்கள் ஒவ்வொன்றும் அடடே ரகம். பள்ளியின் சிறப்பு, பணிபுரியும் ஆசிரியர்களின் தனித்திறன் உள்ளிட்டவை காட்சிகளாக அதில் விரிகின்றன. இந்தக் குறும் படங்களை நூறுநாள் வேலை நடக்கும் இடங்கள், கிராம சபைக் கூட்டங்களில் திரையிட்டுப் பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளின் அருமையை உணர்த்துகிறார். இவற்றுடன் தினம் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று உதவிகள் செய்வதுடன் அவை தரமாகச் செயல்படுகிறதா என்று தொடர் கண்காணிப்பிலும் ஈடுபடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE