அரேபிய ரோஜா 17: ராஜேஷ் குமார்

By காமதேனு

ஒரு புறம் இம்ராவும், இன்னொரு புறம் ஹம்தாவும் சடலங்களாய் சரிந்து கிடக்க, அவர்களுக்கு நடுவே சர்புதீன் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான். கையில் ஒரு காக்டெயில் மது டப்பி.

வேன் அசுர வேகத்தில் போவதற்கு அடையாளமாய் வேனின் கண்ணாடி ஜன்னல்களில் மைக்ரோ விநாடி நேரத்துக்குள் நிறம் நிறமாய் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.

மஹிமாவின் ஒட்டுமொத்த உடம்பும் ஃப்ரிட்ஜில் வைத்த ஒரு பொருளைப்போல் சில்லிட்டுப் போயிருந்தது. அதையும் மீறி நெற்றியில் பயத்தின் காரணமாய் வியர்வைச் சரம்.

சர்புதீன் டப்பியில் இருந்த மதுவை ஒரு வாய் வைத்துவிட்டு, மஹிமாவை சிதைந்துபோன புன்னகையோடு பார்த்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE