திருவண்ணாமலையில் பிறந்த கனிமொழி.ஜி, தற்போது கடலூரில் வசிக்கிறார். மாநில அரசின் சார்நிலை அலுவலராகப் பணிபுரியும் இவர் . ‘மழை நடந்தோடிய நெகிழ்நிலம்’, ‘கோடை நகர்ந்த கதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளும், நூல் விமர்சனங்களும் எழுதிவருகிறார். இலக்கியக் கூட்டங்களில் விமர்சன உரைகளை ஆற்றுகிறார். நண்பர்களுடன் இணைந்து கடலூரில் நடத்திவரும் ஆம்பல் இலக்கியக் கூடலில் பிரதிமாதம் இரண்டாவது ஞாயிறு அன்று சமகால நூல்கள் குறித்து ஆய்வரங்கம் நடத்திவருகிறார். தனக்குப் ‘பிடித்தவை பத்து’ என்று அவர் ‘காமதேனு’விடம் பகிர்ந்தகொண்டவற்றின் தொகுப்பு இது:
ஊர்: என் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்த கடலூர். எனக்கு ஆசுவாசமளிக்கும் அன்னை மடி இந்தக் கடலூர்.
இடம்: படுக்கையின் புறத்திலும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும், என் குரல் மட்டுமே கேட்கும் எனது தனி அறையே எனக்குப் பிடித்த இடம்.
ஆளுமை: நான் வியக்கும் ஆளுமை மனுஷ்யபுத்திரன். கவிதைகளில் மரணத்தைப் பற்றி அதிகம் பேசியவர். ஆனால், அவர் வாழும் விதம் என்னைப் போன்றோருக்கு வாழ்வில் நிறைய பிடித்தங்களை உருவாக்கியிருக்கிறது. தமிழ்க் கவிதை மரபில் தவிர்க்கமுடியாதவர்