திருடு போனதை திரும்பக் குடுங்க..!

By காமதேனு

தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்து திருடுபோன ராஜ ராஜ சோழன் - லோகமாதேவி சிலைகள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிலைகள் குஜராத்தில் விக்ரம் சாராபாய் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான அருங்காட் சியகத்தில் இருப்பதை நாம் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அங்கிருந்துதான் தற்போது அந்தச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 31-ம் தேதி தமிழகம் வந்து சேர்ந்த இந்தச் சிலைகளை தஞ்சைப் பெரிய கோயிலில் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுக்கிறது. “இந்தச் சிலைகளை தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செய்து கொடுத்ததாகத்தான் தெரிவித்திருக்கிறார் ராஜராஜனின் தளபதி. அந்தத் தகவல் கொண்ட கல்வெட்டு ஆதாரத்தை வைத்துத்தான் சிலைகளை இப்போது மீட்டிருக்கிறார்கள். எனவே, சிலைகளைத் தஞ்சைப் பெரிய கோயிலிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்” என்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.

மைந்தனுக்காக மல்லுக்கட்டிய ஓபிஎஸ்!

அண்மையில், ஜெ பேரவையின் மாநிலச் செயலர் பதவிக்கு தனது மகன் ரவீந்திரநாத்குமாரை முன்னிறுத்தினார் ஓபிஎஸ். ஏற்கெனவே இளைஞர் - இளம்பெண் பாசறையின் தேனி மாவட்டச் செயலாளராக இருந்த இவரை, ஜெயலலிதா அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார். இந்த நிலையில், மீண்டும் அவருக்குப் பதவி கொடுத்தால் விமர்சனங்கள் வரும் என யோசித்தாராம் ஈபிஎஸ். அதுமட்டுமின்றி, தற்போது ஜெ பேரவை மாநிலச் செயலாளராக இருக்கும் அமைச்சர் உதயகுமாரைத் தூக்கிவிட்டு அந்தப் பதவியை ஓபிஎஸ் மகனுக்குக் கொடுத்தாலும் சிக்கல் வருமே என்றும் ஈபிஎஸ் தயங்கினாராம். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாம் ஓபிஎஸ் தரப்பு. இதனால் வேறு வழியில்லாமல், தேனி மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவியை ஓபிஎஸ் மகனுக்குத் தந்திருக்கிறார் ஈபிஎஸ்!

அரசு பங்களாவை பதுக்கிய மாயாவதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE