காகிதப் பூக்களால் மணக்கும் சையது அலியின் வாழ்க்கை!

By காமதேனு

பதினெட்டு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதாகச் சொல்லும் சையது அலி, “ தமிழைக் கொஞ்சமா பேசுவேன்; ரொம்ப நல்லா புரிஞ்சுக்குவேன்!” என்கிறார்.

கோவையில் ரயில்வே ஸ்டேஷன், கடைவீதி, சந்தைகள் என மக்கள் கூடும் இடங்களில் சையது அலியை சரளமாகப் பார்க்கலாம். எங்கிருந்தோ வருவார். தனது துருப்பிடித்த சைக்கிளில் எடுத்துவரும் லக்கேஜ்களைப் பிரிப்பார். ஒரு மூட்டையில், சுவற்றில் மாட்டப்படும் சிறு மூங்கில் சட்டம். மற்றொரு மூட்டையில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ண வண்ண காகிதப்பூக்கள். இரண்டையும் ஒன்றுடன் ஒன்று பிணைப்பார். சில நிமிடங்களில் கொத்துக்கொத்தாக காகிதப்பூ அலங்காரம் ரெடி! ஆடம்பர பங்களாக்களிலும் தங்கும் விடுதிகளிலும் அலங்காரத்துக்கெனச் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் காகிதப் பூந்தொட்டிகள் இங்கே தெருவோரம், துருப்பிடித்த சைக்கிளில் கடை விரிக்கின்றன.

சையது அலிக்கு வயது 48. “அஸ்ஸாமில் துப்ரி நகரம்தான் எனக்குச் சொந்த ஊரு. படிச்சது ஏழாம் வகுப்பு. பிழைப்புக்கு வழியில்லாமத்தான் ரயிலேறி தமிழ்நாடு வந்தேன்.

கோயம்புத்தூர்ல சாயிபாபா காலனியில காகிதப் பூ விக்கிறவங்கட்ட இருந்து பூக்களை வாங்கி இதுல அலங்கரிச்சு விக்க ஆரம்பிச்சேன். ஆனா, இங்க கிடைக்கிற மூங்கில் சிறுசா இல்லை. பாலீஷ் போடுறதுக்கு வசமாவும் இல்லை. விலையும் அதிகம். அதனால, அஸ்ஸாம்லருந்து மூங்கிலை வாங்கி, இங்கிருக்கிற காகிதப்பூவை வச்சு வித்தேன். விலையும் கட்டுப்படியாச்சு. பொருளும் பேர் சொன்னுச்சு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE