காய்நகர்த்தும் தினகரன்... கதிகலங்கும் திவாகரன்! அஸ்தமிக்கிறதா சசிகலா குடும்பத்தின் அரசியல் சாம்ராஜ்யம்?

By காமதேனு

“தேவைப்பட்டால் எனது அக்கா சசிகலாவையும் எதிர்ப்பேன்” என்று ஏற்கெனவே காமதேனு பேட்டியில் சொல்லி இருந்தார் திவாகரன். அதற்கு அவசியமில்லாமல், சசிகலாவே திவாகரனை தூக்கி எறிந்ததால்,  “இனிமேல், அவரை என் அக்கா என்று அழைக்க மாட்டேன்” என்று கொதிப்பும் தவிப்புமாய் இருக்கிறார் திவாகரன்!

 ‘இனி எனது பெயரையோ, படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது, உறவு முறையைச் சொல்லி அழைக்கவும் கூடாது’ என்று சசிகலா  அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்குப் பதிலளிக்கும் விதமாக கடந்த 14-ம் தேதி, மன்னார்குடியிலுள்ள தனது, அம்மா அணி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திவாகரன்.

அப்போது துக்கம், சந்தோசம், விரக்தி, ஆதங்கம், ஆவேசம் என கலவையான மனநிலையில் காணப்பட்டார் திவாகரன். அவரை இதற்குமுன் இப்படி பார்த்ததே தில்லை என்று வெளியில் நின்ற அவரது ஆதரவாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

 உண்மைதான். திவாகரன் ‘தி பாஸ்’ என்பதாக மட்டுமே அதிமுகவினரால் அறியப்பட் டவர். மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள அவரது பண்ணை வீட்டின் கதவுகள் இப்போது போல எல்லோருக்காகவும் திறக்காது. மிக முக்கிய மனிதர்களுக்கு மட்டும்தான் அங்கே அனுமதி. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தினங்களில் அவரை தரிசிக்க காத்திருப்போர் வரிசை மிக நீளமானது. அப்படி வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் எம்.எல்.ஏக்கள் ஆனார்கள். சிலர் மந்திரிகளாக்கப்பட்டார்கள். மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளிலும் அமர்ந்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE