அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான முதல்வர்?

By காமதேனு

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான முதல்வர்?

கர்நாடகா தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் காங்கிரஸ் உரிமை கோரியது. ஆனால், அந்த முயற்சியை முறியடித்து பாஜகவின் எடியூரப்பா, கர்நாடகா முதல்வராக மே 17 அன்று பதவியேற்றுக் கொண்டார். பாஜகவின் இந்த நடவடிக்கையைச் சமூக ஊடகங்களில் பலர், #UnconstitutionalCMYeddy என்ற ஹாஷ்டாக் மூலமாகவும் மீம்கள் வழியாகவும் விமர்சித்துக் கொண்டாடினர்.

கான் ஐகான் சோனம்!

71-வது கான் திரைப்பட விழாவில், சோனம் கபூரின் ‘ரெட் கார்பெட் என்ட்ரி’ ஆண்டு தோறும் பேஷன் உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த ஆண்டும் சோனம் கபூரின் கான் திரைப்படவிழா வருகை, சமூக ஊடகங்களில் வைரலானது. அத்துடன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகியோரின் கான் திரைப்பட விழா படங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE