பூம்பூம்பும் மாட்டுக்காரன் மயிலாப்பூர் வந்தான்டி!

By காமதேனு

பூம் பூம் மாடு... இன்றைக்கு நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் சிறு வயதில் ஊர்ப்பக்கம் அடிக்கடி பார்த்திருப்போம். நெற்றிப் பட்டையிலும் கழுத்திலும் அலங்காரமாய் தொங்கும் வெண் சோழி மாலை, கலர் துணிகள் சுற்றி சிங்காரிக்கப்பட்ட கொம்புகள் என அலங்காரம் சூடி வரும் பூம் பூம் மாடுகளின் கால்களில் சலங்கைகள் ஜதி படிக்கும். மாடுகள் மாத்திரமல்ல.. அவைகளை அழைத்து வரும் மாட்டுக்காரர்களும் வண்ணத்தில்  தலைப்பாகை கட்டி,  ஜிகுஜிகுக்கும் ஜிகினா சட்டை சகிதம் ஒரு வண்ணமாய்தான் வடம்பிடித்து வருவார்கள்.

நாகரிக ஓட்டத்தில் இப்போதெல்லாம் பூம் பூம் மாடுகளைக் கண்ணில் பார்ப்பதே அரிதாகி விட்டது. கடந்த வாரம், மயிலாப்பூர் பக்கம் அபூர்வமாய் பூம் பூம் மாட்டைப் பார்த்தேன்; பத்து வயது சிறுவனாகிப் போனேன். பொடியன் ஒருவன் அலங்காரமாய் வந்த அந்த மாட்டின் நெற்றிப்பொட்டை தடவித் தடவிப் பார்த்து ஆனந்தப்பட்டான். அதுவும் திரும்பத் திரும்ப அவனுக்குத் தலைகுனிந்து கொடுத்துக் கொண்டே இருந்தது. அதுவே அத்தனை அலங்

காரமில்லாமல் இருந்திருந்தால், அந்த மாட்டின் அருகே செல்லக்கூட யாரும் அஞ்சுவார்கள். அவ்வளவு முரடாக இருந்த அந்த மாட்டின் வயிற்றைச் சுற்றி சேலைகட்டி திமிறிக் கிடந்த திமிலையும் துணி போட்டு மறைத்திருந்தார் மாட்டுக்காரர்.

“உங்க பேரு..?” மாட்டுக்காரரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE