ஒளிபடைத்த  பெண்ணினாய்...

By காமதேனு

திருவனந்தபுரத்தில் உள்ளது அம்பலமுக்கு. இங்கே, தமிழர்களின் கடைகள் ஏராளம் உண்டு. தமிழும்,மலையாளமும் இப்பகுதியின் பேச்சு மொழிகள். இங்குள்ள ஒரு சிறிய சந்தின் மேல்மாடியில் இயங்கி வருகிறது ‘ஜோதிர்கமயா’ என்னும் பார்வையற்றோருக்கான பயிற்சி மையம். இதை நடத்திவரும் டிஃபானியும் பார்வையற்றவரே. ஆனால், அதைத் தன் வாழ்க்கைப் பாதையில் மாற்றியவர்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர், டிஃபானியின் பூர்வீகம். அப்பா ஃப்றார், இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர். பிறவியிலேயே பார்வையை இழந்த டிஃபானி, 12 வயதில் தாயையும் பறிகொடுத்தார். அப்பா ராணுவத்தில் வேலை செய்ததால், டிஃபானியின் வாழ்க்கை ஹாஸ்டல் வசமானது. குடும்பச் சூழலை விட்டுப் பிரிந்து வந்த பின்னர், பார்வையற்றோரின் வாழ்வியல் துயரம் டிஃபானியை நிறையவே துரத்தியது.

ஆனால், அதையெல்லாம் கண்டு மிரண்டுவிடவில்லை. ஸ்கை டைவிங் தொடங்கி, நீர்ச் சூழலுக்கு நடுவில் நின்று ஒலிகளால் இயற்கையை ரசிப்பது வரை சராசரி மனிதர்களைப் போலவே மிளிர்ந்தார். பல பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் பிறர் துணையின்றிப் பயணித்தார். நிறையக் கற்றுக்கொண்டார். தான் கற்றதைப் பார்வையற்றோர் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கவே இந்த மையத்தை அமைத்துள்ளார் டிஃபானி. ஒரு காலைப் பொழுதில் ஜோதிர்கமயா பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்தோம். கணினியின் முன்பு, பார்வையற்றவர்கள், குழுவாக இருந்து ஓசைகளின் வழியே பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

 “அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை என்பதால், அடிக்கடி பணியிட மாற்றம் இருக்கும். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, திருவனந்தபுரத்துக்கு மாற்றலாகி வந்தார். அப்போதே, கேரளம் இஷ்டபூமியானது. அதனால், என் வாழ்வையும் கேரளத்தில் அமைத்துக்கொண்டேன். பி.ஏ., ஆங்கில இலக்கியமும், தொடர்ந்து சிறப்புக் கல்வியில் ’பி.எட்’டும் படித்தேன். பொதுவாகவே பார்வையற்றவர்கள் வெளிஉலகிற்கு வருவதற்கு மிகவும் தயங்கும் நிலை உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE