சந்திப்புகள் பலவிதம்!
மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென் றிருந்தார் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன். அவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் சந்திக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இருவரும் அளவு கடந்த நெருக்கம் காண்பிப்பது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இருநாட்டு அதிபர்களின் சந்திப்புத் தருணங் கள், சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக மாறிவிட்டன.
மதச்சார்பின்மையை முன்னிறுத்திய ஓலா!
லக்னோவைச் சேர்ந்தவர் அபிஷேக் மிஷ்ரா. இவர் கடந்த வாரம் தான் பதிவுசெய்த ‘ஓலா –கேப்’ ஓட்டுநர்‘முஸ்லிம்’ என்பதால்,அந்த ‘ஓலா’ பயணத்தை ரத்து செய்வதாக ட்விட்டரில் தெரிவித் தார். இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் என்று பிறகு தெரியவந்தது. தனது பணம் ‘ஜிஹாதி’களுக்குச் செல்லக் கூடாது என்பதால், இந்தப் பயணத்தை ரத்து செய்ததாக அவர் காரணம் வேறு தெரிவித்திருந்தார். அபிஷேக்கின் இந்தக் கருத்துக்கு ட்விட்டரில் பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பலர் பாஜகவினரைக் கிண்டல் செய்யும் இதே போன்ற ‘ஓலா’ ட்வீட்களைப் போட்டு அவரை ட்ரோல் செய்தனர். ஓலா நிறுவனமும், அபிஷேக்கின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதச்சார்பின்மைக்கு ஆதரவாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டது.