மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சீத்தாராம் யெச்சூரி. இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இதற்குச் சாதகமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அரசியலில் தொய்வடைந்திருந்தாலும், இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரிகள் பெரும் பங்காற்ற முடியும். அதை இன்னும் செம்மையாக வழிநடத்த யெச்சூரிக்கு மீண்டும் கிடைத்த இந்தப் பதவி பயன்படட்டும்.