விஸ்வரூபம் எடுக்கும் விண்வெளிப் பந்தயம்

By காமதேனு

கடந்த 1961-ம் ஆண்டு, ஏப்ரல் 12-ம் தேதி. உலகையே புரட்டிப்போட்டிருக்கும் மகத்தான அறிவியல் சாதனைகள் பலவற்றுக்கு மனிதன் வித்திட்ட நாள்.

அன்றைய தினம்தான் ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்று பெருமையைப் பெற்றார். ஆண்டுதோறும் அந்த நாள் உலக விண்வெளி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இணையத்தில் மெதுவாகச் சுற்றிக்கொண்டிருக்கும் அந்தச் சக்கரத்தை நீண்ட நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அந்தச் சக்கரம் மிகப் பெரிய பூட்டுபோலத் தோன்றியது. வெளியுலகத்துக்கும் எனக்கும் இடையிலான கதவின் பூட்டு அது. கதவுகள் திறந்தால் மட்டுமே வெளியுலகைத் தொடர்புகொள்ள இயலும். வெளியே எனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நான் அனுப்பவிருக்கும் கட்டுரைக்காக அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். நான் வீடு திரும்புவது குறித்த தகவலுக்காகக் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். ஊரைச் சென்றடைவதற்கான பயணச் சீட்டும் அந்தப் பூட்டைத் திறந்தால்தான் கிடைக்கும். கைபேசி அலைவரிசைத் தொடர்பும் அறுந்துகிடக்கிறது.

ஆனால்,சாவி என்னிடம் இல்லை, அது உலகின் மொத்த சமூகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பலவீனமான கொள்கைகளைக் கொண்ட அரசுகளிடமும் தார்மீகக் கொள்கைகளற்ற பலம் பொருந்திய தனியார் நிறுவனங்களிடமும் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE