இது எனக்கு இயற்கை தந்த வாழ்க்கை!

By காமதேனு

சீதப்பாலில் உள்ள தன்வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு, இயற்கை அங்காடியில் பழங்கள் வாங்க, 15 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிவரும் இன்பசாகரனுக்கு வயது 68. இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இன்பசாகரன், சமைத்த உணவை சாப்பிட்டுப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன!

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இன்பசாகரன் இளம் வயதில் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில், நுரையீரல் பகுதியில் பலத்த அடிபட்டு, மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்டது. இதனால், அடிக்கடி மயக்க நிலைக்குச் சென்றார். பி.யூ.சி படித்திருந்தவருக்குக் காவல் துறையில் வேலையும் கிடைத்தது.   நுரையீரல் பாதிப்பின் சிரமங்களைத் தாங்கிக்கொண்டே பணியில் தொடர்ந்தார்.

ஒருகட்டத்தில், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதைத் தானே ஆய்வு செய்தார் இன்பசாகரன். அப்போதுதான் நுரையீரலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதையும் உணர்ந்தார். இதையடுத்து, திட உணவுகளை எடுத்துக்கொண்டால், செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால், பலவீனமான தனது நுரையீரலால் மூச்சுவிடுவதை சுலபமாகச் செய்ய இயலவில்லை எனவும் முடிவுக்கு வந்தார். அதிலிருந்தே திட உணவுகளைக் குறைக்கத் தொடங்கினார். அப்படி, இட்லி, சோறு என நம்மைப்போல் சராசரி உணவினை இவர் முற்றிலுமாக நிறுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.

“மூன்று நேரமும் திராட்சைப் பழமும், எலுமிச்சை சாறும்தான் ஆகாரம். என்னைக்காவது ஆசைப்பட்டு வாழைப்பழம் சாப்பிடுவேன். நுரையீரலில் அடிபட்டதால, ஆயுசு எப்படியோன்னு எனக்குள்ள ஒரு சந்தேகம். அதனால திருமணமும் செஞ்சுக்கல. இருக்கிற வரைக்கும் நல்லா இருக்கணுமே... அதுக்காக இயற்கையைத் தேடி ஓடினேன். தினமும் யோகாவும் செய்றேன். என்னோட உடம்பை நானே சோதிச்சுப் பார்த்தேன். திரவ உணவும், யோகாவும்தான் பிரச்சினைக்குத் தீர்வுன்னு கண்டுபிடிச்சேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE