எத்தனை பேருக்கு வாய்க்கும் அன்பாலான பெருவாழ்வு!

By காமதேனு

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அப்படி எனில் காதல் திருமணங்கள்..? அதற்கு ஒரு படி மேலே அல்லவா! சக்திவேல் - வள்ளித்தாய் காதல் தம்பதியர் கதையைக் கேட்டபோது இப்படித்தான் தோன்றியது. எத்தனைப் பேருக்கு வாய்க்கும் இப்படியொரு அன்பாலான பெருவாழ்வு. அதனால்தான் சொல்கிறேன், நிச்சயம் நீங்கள் இந்தக் கதையைப் படிக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராமத்தில் இருக்கிறது அந்த வீடு. அப்படி ஒன்றும் பெரிய வீடு இல்லை அது. நடுத்தர வர்க்கத்துக்கும் குறைவான வசதிகள் கொண்ட வாடகை வீடு அது.

“வள்ளித்தாய் எனக்கு  முறைப்பொண்ணு. ஆனா, ரெண்டு குடும்பத்துக்கு இடையே ரொம்ப வருஷமா பேச்சு இல்ல. அதனால் வள்ளித்தாயை எனக்குத் தெரியாது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஸ்ரீவைகுண்டம் கோயில் திருவிழாவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன். கண்டதும் காதல்னு சொல்லுவாங்களே... முதல் பார்வையில மொத்தமா என்னைப் பறிகொடுத்துட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க என் மாமன் மகள்னு. அதுக்கப்புறம் நமக்குச் சொல்லணுமா என்ன... துரத்தி துரத்திக் காதலிச்சேன். ஆரம்பத்துல பிடிகொடுக்கலைன்னாலும் ஒருகட்டத்துல ஏத்துக்கிட்டாங்க.

அப்போதான் திடீர்னு வள்ளித்தாய்க்கு காசநோய் வந்துருச்சு. எல்லாரும் அவளை ஒதுக்க ஆரம்பிச்சாங்க, எனக்குத் தாங்கலை...  கூட்டிட்டுவந்து கல்யாணம் செஞ்சுகிட்டேன். ரெண்டு வீட்டுலேயும் எதிர்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் கூட்டிட்டுப்போனேன். காத்துல தூசு துரும்பு இருந்தாலும் அவளுக்கு ஆகாது. பச்சக் குழந்தையை எப்படிப் பொத்தி பொத்திப் பார்ப்பாங்களோ அப்படிப் பார்த்துக்கிட்டேன். படிப்படியாகக் காசநோயிலிருந்து முற்றிலும் மீண்டுட்டாங்க. இப்போ எங்களுக்கு இரண்டு பசங்க. மூத்தவன் மகாராஜா,  பாலிடெக்னிக் படிக்கிறான்.  சின்னவன் ஜெயேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்...” என்று நிறுத்தினார் சக்திவேல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE