அரேபிய ரோஜா 8: ராஜேஷ் குமார்

By காமதேனு

இம்ரா, சர்புதீன் இரண்டு பேரின் கண்களிலும் கோபம் கொப்பளித்துக்கொண்டிருக்க கெளசிக் அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசினார்.

“ஸாரி... மஹிமா அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.’’

மஹிமா கெளசிக்கிடம் திரும்பினாள்.

“ஸார்... நீங்க மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நான் தப்பா எதுவும் பேசலை. அவங்க கம்பெனியில இருக்குற ரஃபிங்கறவர் சொன்ன ரிஸரெக்‌ஷன் டெக்னாலஜி ரெண்டு வருசத்துக்கு முந்தின பழைய கான்செப்ட். என்னைப் பொறுத்தவரைக்கும் அரதப் பழசு. நம்ம ‘அரேபிய ரோஜா’வோட கம்பேர் பண்ணினா அது ஹைதர் காலத்து டெக்னாலஜி.’’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE