மோடிக்கு கருப்புப் பாடம்

By காமதேனு

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காற்றில் பறக்கவிடப்பட்ட பலூன். தமிழகத்தில் இதற்கு முன்பாக பிரதமர் நேருவுக்கும் இந்திராகாந்திக்கும் கருப்புக்கொடி காட்டப்பட்டது.

ஆனால், அந்த எதிர்ப்புகள் இந்தளவுக்குப் பூதாகரமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதற்காக முதல்முறையாக பொதுமக்கள் பலரும்கூட தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியைக் கட்டியும் குழந்தைகளுக்கு கருப்பு ஆடை அணிவித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். தமிழகத்தையும் தமிழர்களையும் பற்றி மோடி படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது !

படம்: ம.பிரபு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE