கௌசிக்கின் முகம் ஏதோ ஒரு உலோகம்போல் இறுகிப்போயிருக்க, குரலைத் தாழ்த்தினார்.
“மஹி! இறந்துபோனவங்களை மறுபடியும் உயிர்ப்பிக்கிற ‘தி ரிஸரெக்ஷன் டெக்னாலஜி'யில இம்ராவுக்கும் சர்புதீனுக்கும் திடீர்னு நிறைய சந்தேகங்கள். எனக்குக்கூட தகவல் கொடுக்காமலேயே துபாயிலேருந்து புறப்பட்டு வந்துட்டாங்க. இன்னிக்கு ராத்திரி எட்டு மணிக்கு அவங்களுக்கு ஃப்ளைட். நம்ம கம்பெனியிலிருந்து அவங்க புறப்பட்டுப் போறப்ப, சந்தோஷமான மனநிலையில ‘அரேபிய ரோஜா' ப்ராஜெக்ட்டுக்கு ஒரு பிக் ‘எஸ்' சொல்லிட்டு ஃப்ளைட் ஏறணும். அந்த வேலையைப்
பண்ண வேண்டிய பொறுப்பு உன்னோடது. ஒன்லி யூ கேன் மேக் திஸ் சக்சஸ்ஃபுல்.”
மஹிமா, கௌசிக்கின் முகத்தை ஆச்சர்யப் பார்வையால் நனைத்தாள்.