சமகாலத்தின் சமாதானத் தூதுவர்

By காமதேனு

மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தையொட்டி நடந்த கலவரத்தில் தன் மகனைப் பறிகொடுத்தவர் முகம்மது இம்ததுல்லா. உள்ளூர் மசூதியின் இமாமான இவர், கொல்லப்பட்ட தன் மகனுக்காக யார் மீதும் வன்முறை ஏவப்படக் கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  “யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?" என்ற காவல்துறையின் கேள்விக்கும் மவுனத்தையே பதிலாகத் தந்தார். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு  அரசியல் லாபம் அடைய நினைப்போர்க்கு மத்தியில்  உணர்ச்சிபூர்வமான பேரிழப்பின் போதும் நிதானமாகவும் தொலைநோக்குடனும் செயல்பட்டிருக்கிறார் இம்ததுல்லா. மதத்தை வைத்து அரசியல் செய்வோர் எந்த மதமாக இருந்தாலும் இந்தச் சமாதானத் தூதுவரைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE