ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!- பி.எஸ்.கிருஷ்ணன் பேட்டி

By காமதேனு

பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான ஒடுக்கு முறைகள், குற்றங்களைக் கட்டுப் படுத்துவதில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஒரு வலிமையான ஆயுதம். அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் இச்சட்டம் பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தொடர்ச்சியாக இந்தச் சட்டம் தொடர்பாகச் சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. சட்டம் நீர்த்துப்போகலாம் என்றஅச்சத்தின் விளைவாக தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டங்களில் வன்முறை வெடித்து ஒன்பது பேர் உயிரிழந்தனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சூழலில்,  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவரும் முன்னாள் இந்திய அரசுச் செயலருமான  பி.எஸ்.கிருஷ்ணனுடன் பேசினேன்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது?

இந்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. இந்தத் தீர்ப்பின்படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியரைக் கைதுசெய்ய, அவரை வேலைக்கு எடுத்த அதிகாரியின் ஒப்புதல் வேண்டும்;  மற்றவர்களைக் கைது செய்ய மாவட்ட சிறப்புக் காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் வேண்டும்; காரணங்களை ஆராய்ந்த பிறகுதான் குற்றம்சாட்டப்பட்டவரைக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE