இனி உலக அரசியல் பேசப் போறோம்!- யு-டியூப் கோபி, சுதாகரின் அடுத்த கலாய்

By காமதேனு

‘யு-டியூப் காமெடி சேனல்’களின் சூப்பர் ஸ்டார்ஸ் என்று கோபி, சுதாகரைச் சொல்லலாம். ஸ்டாலின் தொடங்கி தீபா வரையில் அரசியல் தலைவர்களை எல்லாம் அவர்களது குரலிலேயே ‘லந்து’ கொடுப்பதில் கோபி ஸ்பெஷலிஸ்ட்.

யு-டியூபைத் தாண்டி, முகநூலிலும் இவர்கள் முகங்கள் ஃபேமஸ். இவர்களது புகைப்படங்கள் அடங்கிய மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ‘மெட்ராஸ் சென்ட்ரல்' யு- டியூப் சேனலில்  இருந்து வெளியேறி, ‘பரிதாபங்கள்' என்ற பெயரில் தனியாக சேனலைத் தொடங்கிவிட்டாலும், அதே குசும்போடு வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

“சுதந்திரமாகப் பணிபுரியனும்னு தான் டி.வி சேனலைவிட்டே, யு- டியூப்புக்கு வந்தோம். இங்கும் சுதந்திரத்தில் கொஞ்சம் தலையிடுவது மாதிரி தெரிந்தது. ஒரு வீடியோவுக்கான ஐடியா யோசித்தால், அதை இன்னொருவரிடம் போய் ‘இது சரியா.. பண்ணலாமா' என்று கேட்டு செய்வதில் விருப்பமில்லை. முடிவு எடுக்கிற உரிமை நம்மளா இருக்கணும்னு நினைச்சேன். முக்கியமா நம்மளும் ஓனரா ஆகிட்டா என்ன என்ற எண்ணமும்தான் காரணம்” என்று சிரித்துக் கொண்டே காரணம் சொல்கிறார்கள்.

“புதிய யு- சேனலுக்கான சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுக்குள்ள ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டீங்களே...” என்று கேட்டால், “இன்னும் வீடியோக்கள் அவ்வளவாக செய்ய ஆரம்பிக்கல பாஸ். ‘பரிதாபங்கள்' மற்றும் ‘ரீல் அந்து போச்சு' இரண்டிலும் ஒவ்வொரு வீடியோ போட்டிருக்கோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE