முழுநேர அரசியல்வாதியாகி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தனது அரசியல் பயணத்தின் அடுத்த நகர்வாக, திருச்சியில் பெரும் கூட்டத்தைக் கூட்டியவர், தனது கொள்கைகளையும் சில செயல் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். முன்னதாக, திருச்சி செல்லும் வழியில் ரயிலில் வைத்து ‘காமதேனு’ இதழுக்காக
அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது.
இந்தப் பயணத்தின் நோக்கம்..?
மக்களோடு மக்களாய்ப் பயணிக்கவேண்டும். நாங்கள் கூட்டமாக சாலையில் பயணித்தால், குறைந்தது பத்து கார்களில் போக வேண்டும். நெரிசல் ஏற்படும். முதலில் இந்த ஆடம்பரத்தைக் குறைக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் அரசியல் செய்வது எப்படி என்று யோசித்துவருகிறேன்.