கெளசிக் தொடர்ந்து அந்த விசேஷ அமைப்போடு கூடிய செல்ஃபோனில் முணுமுணுப்பான குரலில் பேசினார்.
‘‘மஹிமாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள்ல முதலில் பயம் இருந்தது. எங்கே துபாய் போக மாட்டேன்னு சொல்லிடுவாளோனு நெனைச்சேன். ஆனா, அந்த பயத்திலிருந்து அவள் ரொம்ப சீக்கிரமா மீண்டு, துணிச்சலோட பேச ஆரம்பிச்சுட்டா.’’
‘‘அந்தத் துணிச்சல்தான் நமக்கு வேணும். அப்போதான் பின்னால ஏற்படுற பிரச்சினைகள்லருந்து நம்மால தப்பிச்சிக்க முடியும் கெளசிக்...’’ மறுமுனையில் ஒரு பெண் குரல் ரகசியம் பேசியது.
‘‘உண்மைதான்... அந்த ஒரு இலக்கை நோக்கித்தான் நம்ம காய்கள்லாம் நகர்த்தப்படுது.’’