சொட்டாங்கல் – தமிழச்சி தங்கபாண்டியன்

By காமதேனு

’பேந்தா’ கோலி

கட்டதொரைக்கு அவுச்ச சீனிக்கெழங்கும், கோலிக்குண்டும் உசிரு. டவுசரின் ஒரு ஜோப்புக்குள்ளே நாலைந்து கோலிக்குண்டுகளும், இன்னொன்றில் பிச்சுத் தின்னு மிச்சம் வெச்ச சீனிக் கெழங்கும் எப்பவும் இருக்கும்.

“வகுப்புக்குள்ளாற காலு வைக்கு முன்ன டவுசர் ஜோப்ப எடுத்துக் காட்டு”னு அதட்டுவார் லட்சுமண வாத்தியார். கோலிக்குண்டுகளை போத்திராஜா கோயில் பக்கம் போய், ஒளித்து வைத்துவிட்டு தலையைச் சிலுப்பியபடி வாயில் சீனிக்கெழங்கை அதக்கிக்கொண்டு வகுப்புக்குள் நுழைவான்.

தொரைக்குப் ‘பேந்தா’ கோலின்னு பட்டப் பேரு வெச்சது பெத்து ராஜுதான். தொரைக்காகப் பத்துக் காசு பந்தயம் கட்டறது அவன்தான். கோலிக்குண்டு வெளாட்டுல ‘பேந்தா’ தேக்குறது ஒரு நேக்கான சமாச்சாரம். கைமுட்டிலயே கோலிக்குண்ட மணல்ல தள்ளிட்டே எல்லைக்கோடு வரைக்கும் போவணும். பின்னாடி வர்றவன் அதுமேல இன்னொரு கோலிய வெச்சு அடிச்சுடாம கவனமா, அதே சமயம் வேகமாவும் கோலியத் தேக்கணும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE