”என் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது” -ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சீறும் வைகோ!

By காமதேனு

நாடு முழுவதையும் தெற்கு நோக்கித் திருப்பியிருக்கிறது தூத்துக்குடி மக்களின் போராட்டம். ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு அச்சாரம் போட்டவராகக் கருதப்படும் வைகோவை போராட்டக் களத்தில் காண முடியவில்லை. இதுவே அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.

ஒட்டு மொத்த ஊரே போராட்டக் களத்தில் இருக்கும்போது நீங்கள் ஏன் அங்குச் செல்லவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பிலிருந்து பின்வாங்குகிறீர்களா?

இதில் என் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. ஒன்று சொல்கிறேன்... ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1998-ல், நான் போட்ட வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது நானே வாதிட்டேன். ஏழு நாள்கள் நடந்த விசாரணையில் ஏழு மணி நேரம் வாதாடினேன்.  அப்போது என் நேர்மையை நீதிபதிகளே வியந்து பாராட்டினார்கள். ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படவேண்டும் என்பது என் உறுதியான முடிவுகளில் ஒன்று. அதை ஒருபோதும் மாற்ற இயலாது.  2013-ல், விஷப்புகை தாக்கியபோதே மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டது.

இப்போது மக்கள் வெகுண்டெழுந்துவிட்டார்கள். இதை இன்னும் கொதிநிலைக்கு கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைத் திட்டமிட்டுச் செய்வேன். இப்போது நியூட்ரினோ எதிர்ப்பு பணிகளில் உள்ளதால் விரைவில் களத்தில் இறங்குவேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE