சாவித்திரிக்கே சவால் விட்டவர்!

By காமதேனு

தமிழ் சினிமாவைக் காதல் கதைகளின் குடோனாகவும் குடிப்பதைக் கதாநாயகர்களின் குணமாகவும் மாற்றிய ’பெருமைக்குரிய’ படங்களைப் பட்டியலிட்டால் ‘வசந்த மாளிகை’யை தவிர்க்கவே முடியாது. அந்தப் படத்தின் வில்லன் பாலாஜியா... இல்லை, சிவாஜி ஏற்று நடித்த ஆனந்த் என்ற கதாபாத்திரத்தின் குடிப் பழக்கமா என்று தீவிர சிவாஜி ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள். 99.9% பேர் ’வாணிஸ்ரீ’ என்பார்கள். ‘வசந்தமாளிகை’ பார்த்த அத்தனை பேரும் அப்போது வாணிஸ்ரீயைத்தான் திட்டினார்கள்.

தமிழின் அமரகாவியங்களுள் ஒன்றான ’வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜி அளவுக்குப் பேசப்பட்டவர் வாணிஸ்ரீ. “ஏழையாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் என் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று சிவாஜியிடம் தனிச்செயலராக வேலைக்குச் சேரும்முன் வாணிஸ்ரீ விதிக்கும் நிபந்தனையைக் கேட்டு, தங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு துளி உரம் சேர்த்துக்கொண்டார்கள், அன்று குமரிகளாக இருந்தவர்கள். அதுமட்டுமல்ல...

70-களில் தங்களின் ஸ்டைல் ஐகானாகவே வாணிஸ்ரீயை வரித்துக்கொண்டார்கள்.

வாணிஸ்ரீ கொண்டை என்றால் அன்று அவ்வளவு பிரபலம்! கம்பீரம் கலந்த அழகுடன் திரையில் வளைய வந்த வாணிஸ்ரீ அணிந்த புடவை டிசைன்கள் அத்தனைக்கும் அன்று சந்தையில் ஏக கிராக்கி. புடவைக் கடையிலிருந்து உயிர்பெற்று வந்துவிட்ட பொம்மையோ என எண்ண வைத்த வாணிஸ்ரீயின் பெயராலேயே சென்னை பாண்டி பஜாரில் பிரபலமாக இருந்திருக்கிறது ‘வாணி சில்க்ஸ்’ என்ற புடவைக் கடை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE