ஒரு வேலை கிடைக்கணும்... அது அரசாங்க வேலையாவும் இருக்கணும்... தோதான ஊராப் பார்த்து போஸ்ட்டிங் கேட்கணும். ஒண்ணு, ரெண்டு வருசம் குப்பைய கொட்டிட்டு, சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடணும்' பெரும்பாலும் இதுதானே வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்களின் நினைவாக இருக்கும்.
ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பாக ‘பரம்பிக்குளம் ஆரம்பப்பள்ளி’யில்தான் வேலை வேண்டும் என்று கேட்டு வாங்கியவரைப் பார்த்து, ``அது பனிஷ்மென்ட் ஏரியா. புலி, சிறுத்தை, காட்டுயானைகன்னு திரியற காடு'' என்று பயமுறுத்தியவர்களிடையே, ``அது பூலோக சொர்க்கம், சந்தோஷமா போயிட்டு வாங்க!'' என்று ஊக்கப்படுத்தியவர் அப்போதைய கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கேரளப் பகுதியான இங்கு, `இயற்கையோடு வாழ்வோம்' என்ற கனவோடு வந்து சேர்ந்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த அந்த `தில்' டீச்சர் உலகாண்டேஸ்வரி. விஷப் பூச்சிகளின் கடிகள், காட்டு விலங்குகளின் தொந்தரவு, காட்டுத் தீ, காலியாக இருக்கும் பொதுப்பணித்துறை குடியிருப்புகள்... என்று பல `த்ரில்'களோடு ஆசிரியப் பணியைச் செய்து வருபவரின் அனுபவம் இனி அவருடைய மொழியில்...
“பரம்பிக்குளம் அணைக் கட்டுமான வேலை செஞ்சவங்களோட குழந்தைகளுக்கு 1961-ல் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் இது. சுத்தியிருக்கிற பழங்குடி கிராமக் குழந்தைக படிக்க கேரள அரசாங்கம் நிறைய உதவிகள் செய்யுறதால, 2008ல நான் வேலைக்கு வந்தப்ப 7 பசங்கதான் இருந்தாங்க. அடுத்த வருஷமே அதை பதினெட்டா மாத்தினேன். இப்ப மொத்தம் 16. ஆனா இன்னைக்கு 9 பசங்கதான் வந்திருக்காங்க. மலைப்பகுதியில் ஒரு வருஷம் வேலை செஞ்சாலே தரைப்பகுதிக்கு டிரான்ஸ்ஃபர்